For any login issues in Website/Mobile app please call 044 40115088
இணையதளம்/மொபைல் பயன்பாட்டில் ஏதேனும் உள்நுழைவுச் சிக்கல்களுக்கு அழைக்கவும் 044 40115088

Pensioners New Health Insurance Scheme, 2022

About Scheme

The scheme will provide health insurance coverage upto a maximum of Rs. 5.00 lakh per Pensioner (including spouse)/ Family Pensioner for a block of four years from 01-07-2022 to 30-06-2026. The financial assistance shall be enhanced to Rs. 10.00 lakh for specified treatments and surgeries as in the Annexure-IA of the G.O.Ms.No.204, Finance(Health Insurance) Department, Dated:30.06.2022. The scheme is being implemented through the United India Insurance Company.

Eligibility

AAll the Pensioners (including spouse) / Family Pensioners whose pension/family pension including provisional pension/family pension is paid out of the Consolidated Fund of Tamil Nadu and who draw their pension / family pension from the Pension Pay Office, Chennai / District Treasury / Sub-Treasury.(Refer G.O.Ms.No.204, Finance(Health Insurance) Department, Dated:30.06.2022)

Scope of the Scheme

The scope of the Scheme shall be to provide coverage for Eligible Medical Expenses incurred by the Beneficiary of this Scheme during Hospitalisation for the treatments and surgeries listed in G.O.Ms.No.204, Finance(Health Insurance) Department, Dated:30.06.2022

Non payable medical expenses list

View all

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 2022

திட்ட க் குறிப்பு

இத்திட்டத்தில் 01-07-2022 முதல் 30-06-2026 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் (கணவன்/மனைவி உட்பட)/ குடும்ப ஓய்வூதியம் பெறுபவருக்கு ரூபாய். 5.00 இலட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். மேலும் அரசாணை எண். 204, நிதி (மருத்துவ காப்பீடு) துறை நாள் 30.06.2022. இணைப்பு-IA இல் உள்ள குறிப்பிட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு ரூபாய். 10.00 இலட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் (தற்காலிக ஓய்வூதியம் உட்பட) சென்னை ஓய்வூதிய அலுவலகம் / மாவட்ட கருவூலம்/ சார் கருவூலத்திலிருந்து பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்கள் (கணவன்/மனைவி உட்பட) (அரசாணை எண். 204, நிதி (மருத்துவ காப்பீடு) துறை நாள் 30.06.2022 யை காண்க)

திட்ட நோக்கம்

இத்திட்டத்தின் மூலம் அரசாணை எண்.204 நிதி(மருத்துவ காப்பீடு) நாள் 30.06.2022யில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஓய்வூதியதாரர் (கணவன்/மனைவி உட்பட)/ குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டணமில்லா சிகிச்சையாக பெறலாம்.( வழங்க இயலாத செலவினம் தவிர்த்து)

வழங்க இயலாத செலவினப் பட்டியல்

அனைத்தையும் காட்டு